Saturday, March 13, 2010

கோணேசர் கல்வெட்டு


'கோணேசர் கல்வெட்டு' என்கின்ற இந்த வரலாற்று நூல், திருகோணமலையைச் சேர்ந்த கவிஞர் இராஜவரோதயம் அவர்களால் 16 ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது பாடல்களையும் , உரைநடைப்பகுதிகளையும் கொண்டமைந்திருக்கிறது.



அந்த நாட்களில் அரசர்கள் தங்களது திருப்பணிகள், கட்டளைகள் போன்றவற்றை சாசனங்களாகக் குறித்து வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட சாசனத்தை ஆதாரமாகக்கொண்டு இலக்கியங்கள் உருவாக்கப்பட்டால் அது 'கல்வெட்டு' என அழைக்கப்பட்டது.


திருக்கோணேச்சர ஆலயத்துக்கு திருப்பணிகள் செய்த குளக்கோட்டு மன்னன், ஆலயம் பற்றியும், அதனை நிர்வகிப்பது பற்றியும்,கோயிற்தொழும்பாளர்கள் கடமைகள் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கி 'பெரியவளமை பத்ததி' என்னும் செப்பேட்டில் பொறித்து வைத்திருந்தார். அச்சாசன விடையங்களை அடிப்படையாக வைத்து அதைத் தொகுத்தும்,விரித்தும் கவி இராஜவரோதயரால் உருவாக்கப்பட்டதுதான் கோணேசர் கல்வெட்டு.


இந்நூல் மூலம் திருக்கோணேச்சரத்தின் வரலாறு, அவ்வாலயத்துக்கு குளக்கோட்டு மன்னன் செய்த திருப்பணிகள்,திருகோணமலை வன்னிமைகள் பற்றிய செய்திகள்,அக்காலத்து திருகோணமலைச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்கள் என்பனவற்றைப் பற்றி நாம் அறியக்கூடியதாக இருக்கிறது.


முக்கியமாக கோயில் தொழும்பு செய்வோர் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் ,அவர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள், கோணேசர் ஆலயத்துக்குரிய திரவிய இருப்பு என்பன பற்றி விரிவாகச் சொல்கிறது இந்நூல். திருகோணமலையின் வரலாற்றுத் தொன்மைக்கான ஆதாரங்களில் இந்நூல் முக்கிய இடம்வகிக்கிறது.


இணையத்தில்
PDF
வடிவில் வாசிக்க... (நன்றி நூலகம்)


பதிவின் ஒலிவடிவத்தைக்கேட்க...
Share/Save/Bookmark

0 comments:

Post a Comment